போதைப்பொருள் வழக்கில் திடீர் திருப்பம் , ஆர்யன் கான் நிரபராதி - போதை தடுப்பு பிரிவு அறிக்கை

By Irumporai May 27, 2022 09:40 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் வெளி வந்த நிலையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் விசாரித்து வந்தது.

இந்நிலையில், ஆர்யன் கானனை நிரபராதி என்று அவரின் பெயரை சார்ஜ் சீட்டில் இருந்து நீக்கியுள்ளது. தேசிய போதைப்பொருள் தடுப்புப் அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் குற்றாவாளி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யான் கானிடம் இருந்து எந்தவித போதை பொருட்களும் இல்லை என்று கூறப்பட்டது.

ஆகவே ஆர்ய கான் மொபைல் போனை வாங்கி அதில் உள்ள விவரங்களை  பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற போதும் அது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், போதை பொருள் தடுப்பு பிரிவின் சோதனை நடைமுறைகளின் படி இந்த சோதனை வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் போதைக்கடத்தல் தொடர்பான குற்றவாளிகள் பெயர் பட்டியலில், ஆர்யன் கார் பெயர் இடம்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.