ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - ஜாபர் சாதிக் அதிரடி கைது!

Tamil nadu Chennai
By Jiyath Mar 09, 2024 09:30 AM GMT
Report

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜாபர் சாதிக் 

மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - ஜாபர் சாதிக் அதிரடி கைது! | Drug Trafficking Jaffer Sadiq Arrested

இது விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதற்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்த ஜாபர் சாதிக்கை போலீசார் தேடிவந்தனர்.

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர் - வைரலாகும் Video!

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர் - வைரலாகும் Video!

அதிரடி கைது 

ஆனால் ஜாபர் சாதிக் தலைமறைவானதை அடுத்து, அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, விமான நிலையங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - ஜாபர் சாதிக் அதிரடி கைது! | Drug Trafficking Jaffer Sadiq Arrested

மேலும், அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு, அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள். இந்நிலையில் ஜாபர் சாதிக்கை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த கைது குறித்து முழு விவரங்களை மதியம் 2 மணிக்கு மேல் சொல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.