தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டமா? எடப்பாடிக்கு நகைச்சுவைக்கான பரிசு கொடுக்கலாம் : அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் பற்றி புகார் கூறிய எடப்பாடிக்கு சிறந்த நகைச்சுவைக்கான பரிசு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வேன் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
எடப்பாடிக்கு பதில்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 2,839 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் :
தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிமுக ஆட்சிதான் நடந்து வந்தது. அவர்கள் ஆட்சியில்தான் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து இருந்தது.

சிறந்த நகைச்சுவை
டெல்லியில் அமித்ஷாவிடம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் பற்றி புகார் கூறிய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் காவல்துறை ஐஜி ஜார்ஜ், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் உடன் அழைத்துச் சென்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
அவர் சொன்ன அந்த வாசகம், அதன் பொருள் இந்த ஆண்டினுடைய சிறந்த நகைச்சுவையாக இருக்கலாம். அதற்கு அவருக்கு பரிசளிக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுத்து பரிந்துரை செய்வேன் எனக் கூறினார்.