கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட மனைவி.. வசமாக சிக்கிய போதைப் பொருள் கும்பல் தலைவன் - பகீர் பின்னணி!
மனைவியின் கவர்ச்சி புகைப்படங்களால் போதைப் பொருள் கும்பல் தலைவன் போலிஸீல் சிக்கிய சம்பவம் குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்கா
அமெரிக்காவில் லூயிஸ் கிரிஜல்பா என்பவர் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டு வருகிறார். இவருக்குத் திருமணமாகி எஸ்தபானியா மெக்டொனால்டு ரோட்ரிகீஸ் என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில்,லூயிஸ் கிரிஜல்பா கோஸ்டா ரிக்காவில் இருந்து போதைப் பொருள் ஏற்றுமதி செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் இவரைக் கைது செய்ய அமெரிக்கா காவல் துறை முடிவு செய்த நிலையில் தலைமறைவானார்.
போலிஸீல் சிக்கிய சம்பவம்
இதனையடுத்து அமெரிக்கா அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது , லூயிஸ் கிரிஜல்பா மனைவி கவர்ச்சி உடையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதனைத் தேசிய குற்றப் புலனாய்வு முகமை (என்.சி.ஏ.) அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் லூயிஸ் கிரிஜல்பா மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொலம்பியா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லூயிஸ் கிரிஜல்பாவை என்.சி.ஏ. அதிகாரிகள் பின் தொடர்ந்து சென்று கைது செய்தனர்.