இனி பறக்க தடை..! நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி

Delhi United States of America
By Thahir Jan 04, 2023 06:19 AM GMT
Report

விமானத்தில் குடிபோதையில் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த நபர் இனி விமானத்தில் பயணம் செய்ய தடை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

நடுவானில் பறந்த விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் 

நவம்பர் 26, 2022 அன்று அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்த ஜேஎப்கே-ல்  ஏர் இந்தியா விமானத்தில்  பயணம் செய்த பயணி ஒருவர் போதையில் அங்கிருந்த சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Drug addict urinates on female passenger in flight

விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த நபர் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. பின் அந்த பெண்ணின் பை, காலணிகள் மற்றும் உடைகள் சிறுநீரில் நனைந்திருந்ததால் அவருக்கு பைஜாமாக்கள் மற்றும் செருப்புகள் வழங்கப்பட்டதாகவும், இருக்கைக்கு அவரை திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பெண் கூறினார்.

விமானம் தரையிறங்கிய பிறகு விமான குழுவினர் அந்த நபரை தண்டிக்காததை அடுத்து அந்த பெண் பயணி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

பயணிக்க தடை விதிக்கப்படுமா?

இதனால் விமான நிறுவனம் ஒரு குழு அமைத்து, அந்த பயணி இனி எந்த விமானத்திலும் பயணிக்க முடியாத தடைக்கு பரிந்துரை செய்திருந்தது.

தற்போது, இந்த விவகாரம் அரசு ஆய்வு குழுவிடம் உள்ளதாகவும், குழுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விமான நிறுவனத்தால் அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. இதனால் ஏர் இந்தியா என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.