ஊராட்சி மன்ற உறுப்பினர் முதல் குடியரசு தலைவர் வரை : திரௌபதிமுர்மு குறித்த 7 சுவாரஸ்ய தகவல்கள்

BJP India Draupadi Murmu
3 வாரங்கள் முன்

 நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றார், இதுவரை குடியரசு தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்த் இன்று பதவியில் இருந்து வெளியேறுகிறார்.

15வது குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு

நாட்டின் 14வது குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திரௌபதி முர்முவுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் முதல் குடியரசு தலைவர் வரை : திரௌபதிமுர்மு குறித்த 7 சுவாரஸ்ய தகவல்கள் | Droupadi Murmu India First Tribal President

முன்னதாக காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரௌபதி முர்மு, குடியரசுத்தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்த் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார் அதன் பின்னர் பதவியேற்பு விழாவில் பேசிய திரௌபதி முர்மு :

ஏழை வீட்டில் மகளாகப் பிறந்த நான், நாட்டின் குடியரசு தலைவர் ஆக முடியும் என்பது தான் ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள் மட்டும் இளைஞர்கள் நலனில் தனிக் கவனம் செலுத்துவேன். எனது பதவியில் கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும்.

இந்த நேரத்தில் என்னை தேர்ந்தெடுத்த எம்.பி-க்கள் எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலகட்டத்தில் உலகத்திற்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது. சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள்.

ஏழு சுவாரஸ்ய தகவல்கள்

குறிப்பாக இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகள் பட்டியலில் வேலு நாச்சியாரை குறிப்பிட்டு திரெளபதி முர்மு பேச்சு வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய் ஆகியோர் தேச பாதுகாப்பில் புதிய உயரங்களை அளித்துள்ளதாக புகழாரம் சூட்டினார். இந்த நிலையில் திரவுபதி முர்மு குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் :

1 ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முர்மு, தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆசிரியராகப் பணியாற்றினார்.

2 அதன் பிறகு மாநில அரசியலில் நுழைந்த அவர், 2000, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்றார்.

3 சொந்த மாவட்டத்தில் மயூர்பஞ்ச் தொகுதியிலேயே அவர் இரண்டு முறையும் எம்.எல்.ஏ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4  ஒடிசாவில் 2000ஆவது ஆண்டில் பா.ஜ.க.- பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, போக்குவரத்து, வர்த்தகம் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவியேற்றார், முர்மு. பின்னர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளை கவனித்தார்.

ஊராட்சி மன்ற உறுப்பினர் முதல் குடியரசு தலைவர் வரை : திரௌபதிமுர்மு குறித்த 7 சுவாரஸ்ய தகவல்கள் | Droupadi Murmu India First Tribal President

5  2009இல் பா.ஜ.க.நெருக்கடியாக இருந்த சமயத்தில் திரௌபதி முர்மு வெற்றிபெற்றார் ஜார்க்கண்டு மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, அதன் முதல் பெண் ஆளுநராகக் கடந்த 2015ஆம் ஆண்டில் முர்மு பதவியேற்றார்.

6  தனது சொந்த வாழ்க்கையில் தனது கணவர் சியாம் சரணையும் இரண்டு மகன்களையும் பறிகொடுத்துள்ளார் , ஆனாலும் தனது அரசியல் பாதையில் முன்னேறியுள்ளார்.

7  முன்னதாக, சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன், 1997ஆம் ஆண்டில் இராய்ரங்பூர் நகர் ஊராட்சியில் மன்ற உறுப்பினராகவும் அவர் பதவிவகித்துள்ளார்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.