வரும் ஜூலை 25ம் தேதி ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பதவியேற்கிறார் - குவியும் வாழ்த்துக்கள்
குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், கடந்த ஜூலை 18-ம் தேதி 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் தேர்தல் போட்டியில் இறங்கினர்.
திரௌபதி முர்மு அமோக வெற்றி
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றது. 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கிய திரௌபதி முர்மு அமோகமாக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்ற புகழைப் அவர் பெற்றுள்ளார்.
பதவியேற்கிறார்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, வரும் ஜூலை 25ம் தேதி திரௌபதி முர்மு இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதிக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
