ட்ரோன் கண்காணிப்பில் உள்ளது திருவள்ளூர் : காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி, வாகன தணிக்கை நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாக்வும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் ஊரடங்கை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் பொதுமக்கள் தமிழக அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கொரோனா காலத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து காவல்துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.