சவுதி விமான நிலையத்தில் திடீரென ட்ரோன் தாக்குதல்.. பயணிகள் அதிர்ச்சி

airport saudi droneattack
By Irumporai Aug 31, 2021 01:05 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

சவுதி அரேபியா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் , ஏமன் நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஆதரித்து வரும் நிலையில் ஏமன் அரசு படைக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் மாகாணத்தில் உள்ள அப்ஹா எனும் சர்வதேச விமான நிலையத்தில், இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ட்ரோன் மூலமாக விமான நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஏவுகணை தடுப்பு அமைப்பு இருந்ததால் :சில குண்டுகள் தடுக்கப்பட்டாலும் விமான நிலையம் மீது சில குண்டுகள் விழுந்துள்ளது.

இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். விமானம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ட்ரோன் தாக்குதல் சவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது எனவும் கூறப்படுகி்றது.