பேருந்தில் உணவை சிந்தியதால் ஆத்திரம் - ஆணுறுப்பை சிதைத்து கொன்ற டிரைவர்
பேருந்தில் உணவை சிந்திய வாலிபரை ஓட்டுநர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
வாலிபர் சடலம்
டெல்லியில் உள்ள பவானா மேம்பாலம் அருகே ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக 02.02.2025 அன்று காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
தனது சகோதரர் மனோஜை காணவில்லை என புகார் அளித்த ஜிதேந்திராவிற்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். அதன் பின்னர் சடலத்தை பார்த்த ஜிதேந்திரா இது தனது சகோதரர் மனோஜ்தான் என உறுதிப்படுத்தினார்.
பேருந்து பயணம்
அதன் பின்னர் 5 ஆம் தேதி நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில், மனோஜ் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, உடல் மீட்கப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது.
அதில், சந்தேகத்திற்கு இடமான ஆர்.டி.வி பேருந்து ஒன்று இருந்தது தெரிய வந்தது. அந்த பேருந்து ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த பேருந்து ஓட்டுநரும் அவரது நண்பரும் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட மனோஜ் திருமணங்களில் சமையல் வேலை செய்து வருபவர். கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ஒரு திருமணத்தில் வேலை முடித்து விட்டு மீதமுள்ள உணவை எடுத்துக்கொண்டு தனது நண்பர் தினேஷுடன் பேருந்தில் எறியுள்ளார். பேருந்தில் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 4 பேர் இருந்துள்ளனர்.
கொலை
இந்நிலையில் பேருந்து பாவனா சவுக் பகுதியில் செல்லும் போது சிறுதளவு உணவை மனோஜ் தவறுதலாக கீழே சிந்தியுள்ளார். இது டிரைவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், தினேஷை அந்த நிறுத்தத்தில் கீழே இறங்க அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் தனது சட்டையை கழற்றி அந்த உணவை துடைக்குமாறு மனோஜை ஓட்டுநர் வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனோஜை இரும்பு கம்பியால் அவரது ஆணுறுப்பை தாக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின்னர் அந்த உடலை செல்லும் வழியில் மேம்பாலத்தில் இருந்து கீழே வீசியுள்ளனர். இதில் இருவர் கைது செய்யபட்டுள்ளனர். மற்ற இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)