காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர்.., உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம்
Driver's Family Accepts Body After Suicide at Madurai Police Station- மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர்
தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (42).
லாரி ஓட்டுநரான இவர், கடந்த நவம்பர் 3ஆம் தேதி ரூ.3 கோடி மதிப்புள்ள 60 ஏலக்காய் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரை சென்றார்.
உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் சென்றபோது, லாரியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.
ஆனால், லாரியில் இருந்த ஏலக்காய் மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாலகிருஷ்ணனை செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை காவல் நிலையக் கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால், போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் தனது சட்டையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 4 நாட்களாக உடலைப் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவரது உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தன் மகளைப் பாதுகாக்க முடியவில்லை: அத்துமீறலுக்கு உள்ளான அனுராதபுரம் பெண் வைத்தியரின் தந்தை கண்ணீர் மல்க சாட்சி IBC Tamil
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil