4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - POCSO வழக்கில் சிக்கிய பிரபல த்ரிஷ்யம் பட நடிகர்!!
குழந்தைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாலியல் தொல்லை
பிரபல மலையாள நடிகரும் மிமிக்ரி கலைஞருமான கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது, 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குழந்தையின் தாய் அளித்த புகாரில் கோழிக்கோடு கசாபா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குடும்பத் தகராறு ஒன்றை கொண்டு நடிகர் ஜெயச்சந்திரன் குழந்தையைத் தாக்கியதாகவும் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
கைது?
வெளிவரும் செய்திகளின் படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின் வழிகாட்டுதலில், போலீசார் குழந்தையின் வீட்டிற்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கின் மற்ற விவரங்கள் குறித்து அவர்கள் இதுவரை வெளிவரவில்லை.
ஜெயச்சந்திரன் மலையாள ரசிகர்களிடம் பரிட்சயமான முகமாகவே உள்ளார். திரைப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் நன்கு அறிமுகமானவர் இருக்கிறார்.
பெரும் வெற்றியை பதிவு செய்த நடிகர் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான "த்ரிஷ்யம்" படத்திலும் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.