பேருந்தில் பயணித்த குடிகார பெண்ணால்...சந்தி சிரிச்ச பேருந்து

Women Govt Bus Tourcher Drinks
By Thahir Dec 14, 2021 08:16 AM GMT
Report

ஈரோட்டில் இருந்து மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கலவரம் செய்த குடிகார பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அதில் கரூர் பேருந்து நிலையத்தில் சாந்தி என்ற பெண்னும் வெள்ளைவேட்டி சட்டை அனிந்தவரும் கரூரிலிந்தே சண்டை போட்டுக்கொண்டே குடிபோதையில் ஏறியதாக கூறப்படுகிறது.

பேருந்தில் ஏறிய பெண் பேருந்திற்குள்ளேயே தகாத வார்த்தைகளால் தன்னுடன் வந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர் அவரை அமைதியாக இருக்குமாறு கூறிய ஆண் பயணிகளை சாந்தி தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளார்.

இதனால் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் செய்வதறியாது திகைத்தனர் பேருந்து செல்லச்செல்ல குடிபோதை பெண்ணின் ஆக்ரோசம் அதிகரித்தது.

இதனால் வேறுவழியின்றி வேடசந்தூர் வந்த பேருந்தை காவல் நிலையத்திற்கு செல்லுமாறு பயணிகள் அறிவுறுத்தி உள்ளனர் பின்பு ஓட்டுநர் காவல் நிலையத்திற்கு பேருந்தை இயக்கினார்.

அங்கு பேருந்திலிருந்து பெண்ணை காவல்துறையினரிடம் பயணிகள் ஒப்படைத்தனர் காவல் நிலையத்திலேயே காவல்துறை முன்பாகவே பெண் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் செய்ததால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அப்பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேருந்தில் குடும்ப பெண் ஒருவர் மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்டு சம்வம் சக பயணிகளை முகம் சுழிக்க வைத்தது.