தமிழ்நாட்டில் சுமார் 90 லட்சம் பேருக்கு மதுப் பழக்கம்: மத்திய அரசு தகவலால் அதிர்ச்சி

India Central government Alcoholic person
By Petchi Avudaiappan Jul 20, 2021 12:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

தமிழ்நாட்டில் சுமார் 90 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருவது குறித்தும் மாநில வாரியாக இது குறித்த புள்ளி விவரங்களை வழங்குமாறும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் பதில் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவில் சுமார் 15,01,16,000 பேருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3,86,11,000 பேருக்கு இந்தப் பழக்கம் இருப்பதாகவும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரயில், சுமார் 90 லட்சம் பேருக்கு மதுப் பழக்கம் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் 2,90,00,000 பேருக்கு கஞ்சா பழக்கமும், தமிழ்நாட்டில் சுமார் 1,04,000 இந்தப் பழக்கம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில்தான் சுமார் 1,20,31,000 பேருக்கு கஞ்சா பழக்கம் இருக்கிறது.