மதுபான பாட்டிலில் பேப்பர் துண்டு...ஷாக் ஆன குடிமகன்!

Madurai Drinks
By Thahir Jul 06, 2021 11:03 AM GMT
Report

மதுரையில் டாஸ்மாக்கில் வாங்கப்பட்ட மதுப்பாட்டிலில் பேப்பர் மிதந்ததால் குடிமகன் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.

மதுபான பாட்டிலில் பேப்பர் துண்டு...ஷாக் ஆன குடிமகன்! | Drinkers Madurai

கடந்த மாதம் ஜூன் 14 ம் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனையானது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் சத்திரபட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் ரஞ்சித்குமார் என்பவர் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் பேப்பர் மேலும் கீழும் மிதந்துள்ளது. 120 ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த மதுப்பாட்டிலில் பேப்பர் ஒன்று மிதந்தை கண்டு ரஞ்சித்குமார் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அரசு மதுபானக் கடையில் வாங்கப்பட்ட மதுப்பாட்டிலில் கலப்படம் செய்தது போல பேப்பர் மிதந்தது மன வேதனையை தருவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுப்பிரியர் ரஞ்சித் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே மதுரையில் தரமற்ற மலிவான மதுவகைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்போது மதுப்பாட்டிலில் பேப்பர் மிதக்கும் சம்பவம் மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.