பால் குடிங்க , சரக்கு வேண்டாம் : பசுக்களை கட்டி போராட்டம் நடத்திய உமா பாரதி
மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி அமைத்து வருகின்றது அங்கு முதலமைச்சராக சிவராஜ் சிங் உள்ளார்.
உமாபாரதி போராட்டம்
இந்த நிலையில் அந்த மாநிலத்தின் போபால் நகரில் உள்ள அனுமன் மற்றும் கோவிலுக்கு பாஜக மூத்த தலைவர் உமா பாரதி சென்றுள்ளார், அப்போது கோவிலுக்கு முன்பு மதுக்கடை இருந்துள்ளதை பார்த்த உமாபாரதி ஆவேசமானார்.
கோவிலுக்கு முன்னால் மது கடையும், பாரும் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார். முதல்-மந்திரி என்னிடம் ஜனவரி 31-ந்தேதிக்குள் புதிய மது கொள்கை அறிவிக்கப்படும் என கூறினார். அந்த கொள்கைக்காக நான் இன்னும் காத்து கொண்டிருக்க முடியாது.
பசுக்களை கட்டிய விநோதம்
மதுக்கடைகளில் நான் கோசாலைகளை தொடங்க போகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பெரிய விசயம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களது பிரச்சனைகளை கேட்டு தீர்ப்பதுமே அதன் நோக்கம் ஆகும் என கூறினார். இந்நிலையில், நிவாரி மாவட்டத்தில் ஆர்ச்சா நகரில் உள்ள மதுக்கடை ஒன்றின் முன்னால் பசுக்களை கட்டி வைத்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன்பின் மதுவை கை விட்டு, விட்டு பால் குடியுங்கள் என்று அவர் கோஷம் எழுப்பினார்
மதுக்கடையினை மூட அந்த இடத்தில் பசு மாடுகளை கட்டி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்திய சமப்வம் தற்போது பேசு பொருளாகியுள்ளது

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.