மாற்று உடை கூட இல்லை: வீட்டை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்! ஒரு வாரமாக வாசலில் வசிக்கும் குடும்பம்
மதுரையில் வங்கியில் வாங்கிய கடனை திருப்ப முடியாமல், நிர்வாகம் வீட்டை சீல் வைக்க ஒருவார காலமாக வாசலிலேயே குடும்பம் வசித்து வருகின்றனர். மதுரையின் விருசங்குளத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், இவரது மனைவி செல்வி, இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு தனியார் வங்கியில் ரூ4.5 லட்சத்தை கடனாக பெற்றுக்கொண்டு பசுமாடுகளை வாங்கி தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக சதீஷ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, இதில் கொரோனாவும் வர கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தனியார் வங்கியினர் விதிகளின் படி, எந்த பொருளையும் எடுக்க முடியாமல் சீல் வைத்துவிட்டு சென்றனர்.
இதனால் சமையலுக்கு தேவையான பொருட்கள், மாற்று உடை கூட எடுக்க முடியாமல் ஒருவார காலமாகவே வாசலிலேயே வசித்து வருகின்றனர்.
பொருட்களையாவது எடுக்க அனுமதிக்க வேண்டுமென சதீஷ்குமார் கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.