ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வேலை போயிட்டா ? அப்போ இங்கே வாருங்கள்: பிரபல நிறுவனம் அழைப்பு

Facebook Twitter
By Irumporai Nov 14, 2022 02:53 AM GMT
Report

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களில் வேலையினை இழந்த நபர்கள் தங்களின் நிறுவனத்திற்கு வேலைக்கு வரலாம் என பிரபல நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாங்கள் வேலை தருகிறோம்

உலகம் முழுவதும் உள்ள பெரும் நிறுவனங்கள் தற்போது வேலை நீக்க நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ட்விட்டர் , பேஸ்புக் மற்று அமேசான் போன்ற பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே , ஆட்கள் குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.

ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வேலை போயிட்டா ? அப்போ இங்கே வாருங்கள்: பிரபல நிறுவனம் அழைப்பு | Dream 11 Called Staffs In Their Company

 dream11 

இந்த நிலையில் dream11 நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்ஷ் ஜெயின் எனபவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில், கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் , பேஸ்புக் போன்ற நிறுவனங்களில் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார்.

மேலும் தங்கள் நிறுவனம் தனது நிறுவனம் லாபகரமானது மற்றும் நிதி ரீதியாக நிலையானது என்பதை கூறிய அவர்  "நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ மேற்கூறியவற்றுடன் பொருந்தினால், தயங்காமல் எங்களை indiareturns@dreamsports.group இல் தொடர்பு கொள்ளவும் என கூறியுள்ளார்.