திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதீனங்களே இல்லை - கி.வீரமணி பேச்சு!
திராவிடர் இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் ஆதீனங்களே இருந்திருக்க முடியாது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.
கி.வீரமணி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திராவிடர் கழகம் சார்பில் மாநில உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆதீனத்தை காப்பாற்றியது திராவிடர் இயக்கம்தான்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மதுரை ஆதீனம் அறநிலையத்துறைக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதீனங்களே இருந்திருந்த முடியாது. இந்த வரலாறு புதிதாக பொறுப்பேற்று வந்து இருக்கும் மதுரை ஆதீனத்திற்கு தெரியாது.
சூத்திரர்கள் சன்னியாசி ஆக உரிமை இல்லை என்பது உச்சநீதிமன்றம் அளித்து இருக்கும் தீர்ப்பு. இதையெல்லாம்பற்றி கவலைப்படாமல் ஆதீனங்களை அங்கீகரித்து இருப்பதே இந்த அரசுதான்.
காரணம் கலைஞர் அரசு இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு என்று சொன்னார். இதை புரிந்துகொள்ளாமல், யாருக்கோ யாரோ விடுகின்ற வில்லில் இவர்கள் அம்பாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
விரைவில் அவர் தன்னுடைய உணர்வுகளுக்கு திரும்ப வேண்டும். திரும்புவார். முன்னாள் இருந்த மதுரை ஆதீனத்தை காப்பாற்றியது திராவிடர் இயக்கம்தான் என்பதை இவர் மறந்துவிட்டார்.
எனவேதான் அவருடைய கடையானியை அவரே கழற்றிக்கொண்டு இருக்கிறார் என்றார்.