கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் : ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என புதுவைஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்
தமிழிசை சவுந்தரராஜன்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார்.

கலைஞர் மகன்
அப்போது செய்தியாளார்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும்.
திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?. திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என கூறினார்.