திமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகுவது தான் திராவிட மாடல் : எடப்பாடி பழனிசாமி
DMK
Edappadi K. Palaniswami
By Irumporai
திமுகவில் இருந்து அதன் தலைவர்கள் விலகுவது தான், திராவிட மாடல் ஆட்சி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக தெரிவித்தார்.

இதுதான் திராவிட மாடல்
குறிப்பாக, தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் மாணவர்கள் சீரழியும் நிலை இருப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும், திமுகவில் இருந்து அதன் தலைவர்கள் விலகுவது 16 மாத கால ஆட்சியின் சாதனை, ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகுவது தான் திராவிட மாடல் என விமர்சித்தார்.