ஒட்டுமொத்த நம்பிக்கையை உடைத்த புஜாரா - கடுப்பில் டிராவிட் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி
தென்னாப்பிரிக்காவுக்கான எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நடந்துக்கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து வீசக்கூட முடியாமல் ரத்து செய்யப்பட்டது.
துணை கேப்டன் கே.எல்.ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில் இப்போட்டியில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலே அழகாக ஷாட் லெக்கில் நின்றவரிடம் கேட்ச் கொடுத்து புஜாரா கோல்டன் டக்காகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வரலாற்றில் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கி அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற சோகமான சாதனையை புஜாரா படைத்தார்.
மேலும் அவுட்டான பிறகு நேரடியாக ஓய்வறைக்கு சென்ற புஜாரா உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவருக்கு எதிரே சென்ற ராகுல் டிராவிட் எதையும் அவரிடம் அதிகம் பேச விரும்பவில்லை. அதிருப்தியில் இருந்தவாறு, தோளில் தட்டிக்கொடுத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். அதன் பின்னர் புஜாராவும் வருத்தமாக நின்றுக்கொண்டிருந்த காட்சிகளும் வைரலாக ப்ரவி வருகிறது.