"ஜெயிக்கிறமோ... தோக்குறோம்..சண்டை செய்யணும்" : கொளுத்திப் போட்ட ராகுல் டிராவிட்

Indian team INDvsSL Rahul Dravid
By Petchi Avudaiappan Jul 22, 2021 10:34 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

 இலங்கை சென்றுள்ள இந்திய அணி வீரர்களுடன் இந்திய வீரர்களுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நடத்திய டீம் மீட்டிங்கின் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 3வது போட்டி நாளை நடைபெற உள்ளது. இதனிடையே 2வது போட்டி முடிந்தவுடன் அவசர அவசரமாக இந்திய அணிக்கு டீம் மீட்டிங் ஒன்றை டிராவிட் ஏற்பாடு செய்தார்.

அதன் வீடியோவை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நாம் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். ஒருவேளை நாம் தோல்வியை சந்தித்து என்றாலும், அதில் வருத்தப்பட எதுவுமில்லை. ஏனென்றால் கடைசி வரை நாம் கடுமையாக போராடினோம்.

வெற்றி - தோல்விக்கு அப்பாற்பட்டு நாம் எந்தளவிற்கு சண்டை செய்தோம் என்பதே முக்கியம் என தெரிவித்துள்ளார்.