பூஜைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

By Irumporai Jun 26, 2023 09:40 AM GMT
Report

ஆகம, பூஜைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுளளது.

 அர்ச்சகர் விவகாரம்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகக்கற்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதுமென குறிப்பிடப்பட்டு இருந்தது.

பூஜைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகராகலாம் : உயர்நீதிமன்றம் தீர்ப்பு | Dras High Court Has Dras High Court Become Priests

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பிட்ட கோவில்களின் ஆகம விதிகள் தெரிந்திருந்தால் போதும் என அறநிலையத்துறை விளக்கம் கொடுத்து இருந்தது.

இதனடிப்ப்டைல், அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை தெரிந்து அதில் தேர்ச்சி பெற்று இருந்தாலே போதுமானது. ஆகமத்தை பின்பற்றாத கோவில்களை ஆகமத்தை படிக்காதவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.