வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; விண்ணப்பிக்க டிசம்பர் 11 ஆம் தேதி வரை அவகாசம்
draft electoral roll released in tamilnadu: தமிழ்நாட்டில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடப்பட்டுள்ள நிலையில், அதில் திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்க டிசம்பர் 11 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டு உள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இதில் பொதுமக்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தம் இருந்தால் திருத்தம் கோரி விண்ணப்பிக்கலாம்.
மேலும், புதிதாக பெயர் சேர்த்தல், இடம் மாற்றம், பெயர் நீக்குதல் போன்றவற்றுக்காகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11 ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் அளிக்கலாம்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், https://voterportal.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ECINET கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் மீது டிசம்பர் 28 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனையடுத்து, 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.