ஜெய்பீம் பட விவகாரம்: அன்புமணியிடம் சண்டைக்கு சென்ற டாக்டர் ஷர்மிளா

actorsuriya Jaibhim anbumaniramadoss drsharmila
By Petchi Avudaiappan Nov 11, 2021 07:32 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

ஜெய்பீம் படம் குறித்து நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸிடம் நடிகையும் டாக்டருமான ஷர்மிளா பதிலடி கொடுத்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜெய்பீம் படத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள நடிகையும், மருத்துவருமான ஷர்மிளா, இதை திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் வரும் போது ஏன் சொல்லவில்லை? என அன்புமணியிடம் கேள்வி கேட்டுள்ளார்.