முன்பின் தெரியாத நீர் நிலைகளில் இறங்கக் கூடாது... - அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஐபிஎஸ்

Tamil nadu Viral Video
By Nandhini Sep 01, 2022 08:51 AM GMT
Report

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆபத்து எந்த வடிவத்தில் வரும் என முன்கூட்டியே கணிப்பது கடினம். ஆனால் நாம் உஷாராக இருந்தால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

வீடியோ வெளியிட்ட ஐபிஎஸ்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒருவர் கையில் பொருளை எடுத்து ஆற்றங்கரையில் தூக்கி எறிகிறார். அப்போது, திடீரென ஒரு பெரிய முதலை ஆற்றிலிருந்து தாவி வெளியே எகிறுகிறது. இதைப் பார்த்த அந்த நபர் அலறி அடித்து ஓடுகிறார்.

இந்த அதிர்ச்சி வீடியோவை டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் அதிகாரி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முன்பின் தெரியாத நீர் நிலைகளில் இறங்கக் கூடாது அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.            

dr-r-stalin-ips-viral-video