தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம்..!
தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கொரோனா அதிகரிப்பால் மக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது என்றார்.
சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.
பேருந்துகளில் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் பயணிக்கின்றன.
எனவே பொதுமக்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
116 வயதிலும் தளராத பக்தி... 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி! வைரலாகும் வீடியோ Manithan