கார்கிவ் பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்யப் படைகள் - 11 பேர் உயிரிழந்ததாக தகவல்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா தொடர்ந்து 5வது நாளாக அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே ரஷ்யாவின் அழைப்பை ஏற்று பெலாரசில் உள்ள கோமல் நகரில் இருநாட்டு பிரதிநிதிகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் பொதுமக்களில் 11 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அங்கு வான்வெளி தாக்குதலுக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டால் மட்டுமே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வெளியே வர வேண்டும் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.