வரதட்சணை கொடுமை - திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தற்கொலை..!

Andhra Pradesh Marriage Death
By Thahir Jul 03, 2023 08:32 PM GMT
Report

வரதட்சணை கொடுமையால் திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல் 

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள வஜ்ர கொத்துாரைச் சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவருடைய மகள் சைதன்யா 23 வயதாகும் இவர் நெல்லுாரில் உள்ள மருத்துவ கல்லுாரி ஒன்றில் மருத்துவ படிப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில் இவருக்கு 3 மாதங்களுக்கு முன்னர் விஜயநகரம் மாவட்டத்தில் பிஜி படித்து வரும் ஒரு மருத்துவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணத்தின் போது சைதன்யாவுக்கு வரதட்சணையுடன் திருமணம் நடத்தியுள்ளனர். இருந்த போதும் அவருடைய கணவர் அதிக நகை, பணம் கேட்டு சைதன்யாவை துன்புறுத்தியுள்ளனர்.

Dowry violence - young woman commits suicide

கார் கேட்டு மனைவியை ஆபாசமாக திட்டிய  கணவர் 

இதையடுத்து சைதன்யாவின் அம்மா தாய் ஜோதிகுமாரி அவர் கேட்ட நகை பணத்தை கொடுத்துள்ளார். இருந்த போதும் தனக்கு கார் வேண்டும் என்று மருத்துவர் மாப்பிள்ளை மனைவி சைதன்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

சைதன்யாவின் தாய் ஆடி மாதம் முடிந்தவுடன் கார் வாங்கி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சைதன்யாவுக்கு போன் செய்த அவரது கணவர் போனில் ஆபசமாக திட்டியுள்ளார்.

மனம் உடைந்து போன சைதன்யா தனது தாய்க்கு போன் செய்து கணவரின் தொல்லையை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி போனை சுவிட்ச் - ஆப் செய்துள்ளார்.

துாக்கிட்டு தற்கொலை 

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அவரின் தாய் மகள் சைதன்யாவின் தோழிக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார்.

Dowry violence - young woman commits suicide

பின்னர் அங்கு சென்ற அவரது தோழிகள் கதவை வெகு நேரமாக தட்டியுள்ளனர். ஆனால் சைதன்யா கதவை திறக்கவில்லை.

இதையடுத்து அவர்கள் விடுதி காப்பாளர் மற்றும் மற்ற ஊழியர்களுக்கு தகவலை தெரிவித்தனர். கதவை உடைத்து பார்த்த போது சைதன்யா மின விசிறியில் துாக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.