தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இருக்கு , ஆனால் இவருக்கு கொடுக்க மாட்டீங்க : சுரேஷ் ரெய்னா ஆதங்கம்
தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கும் இடம் கிடைத்திருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்தியா வரும் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில பங்கேற்க உள்ளது.
இந்தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில பங்கேற்க உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., 23ம் தேதி அறிவித்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்களின் பனிச்சுமையை குறைப்பதற்காக தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கே.எல் ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக்கை போன்று ஷிகர் தவானிற்கும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில்,
“ஷிகர் தவான் நிச்சயமாக மிகுந்த வேதனையுடனும், ஏமாறத்துடனும் இருப்பார். ஷிகர் தவானை போன்ற ஒருவர் ஒவ்வொரு கேப்டனுக்கும் தேவையான வீரராக இருப்பார். சர்வதேச போட்டிகளானாலும், உள்ளூர் போட்டிகளானாலும் ஷிகர் தவான் தனது வேலையை மிக சரியாகவே செய்து வருகிறார்.
தினேஷ் கார்த்திக்கை போன்று ஷிகர் தவானும் இந்திய அணியில் இடம்பிடிக்க முழு தகுதியானவர் தான். தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் அணியில் இடம் கொடுக்க முடியும் என்றால், ஷிகர் தவானிற்கும் இடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கடந்த 3-4 வருடங்களாக ஷிகர் தவான் தனது வேலையை சரியாக செய்து அதிகமான ரன்களும் குவித்து வருகிறார், தற்போது ஷிகர் தவான் கண்டிப்பாக ஏமாற்றமடைந்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.