கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் டோனட் இலவசம்: அமெரிக்காவில் சுவாரஸ்யம்
கொரோனா வைரஸ் கடந்த ஒரு வருடத்தில் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் மிக முக்கியமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்கா தான். இந்த நிலையில் தற்போது அமெரிக்கா அதிபரான ஜோ பைடன் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.
அமெரிக்காவில் மாடர்னா, பைசர் மற்றும் பையோன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது வரை மொத்தம் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் டோனட்ஸ் இலவசம் என்ற வினோத அறிவிப்பை அந்நாட்டில் உள்ள கிரிஸ்பி கீரிம் என்ற கடை அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அட்டையை காண்பித்த்தால் இலவச டோனட்ஸ் வழங்கப்படும் என அக்கடை தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.