அமெரிக்காவில் இரட்டை துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி…!
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இரட்டை துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே உள்ள கடலோர சமூகத்தில் ஒரு காளான் பண்ணை மற்றும் ஒரு டிரக்கிங் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற 2 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்தத் துப்பாக்கிச் சூடு சான் பிரான்சிஸ்கோவிற்கு தெற்கே 30 மைல் (48 கி.மீ) தொலைவில் ஹாஃப் மூன் பேயின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஜாவோ சுன்லி (67) என்ற சந்தேக நபரின் கார் ஹாஃப் மூன் பேயில் உள்ள ஷெரிப் அலுவலக துணை மின்நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கான நோக்கம் தற்போது தெரியவில்லை.
கலிஃபோர்னியாவின் மான்டேரி பூங்காவில் சந்திர புத்தாண்டு விழாவில் 11 பேர் கொல்லப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியின் வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச் சூடு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
