இரட்டைக் கொலை சம்பவம் காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்
அரக்கோணம் அருகே தேர்தல் மோதல் இருவரது கொலையில் முடிந்திருப்பது வேதனை அளிப்பதாகவும்,காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளஅறிக்கையில்: அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா.
அதில் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறும் போது ஆககருத்துப் பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமேஅமைதிக்கும் வலு சேர்க்கும். ஆனால் இந்த தேர்தல் சமயத்தில் நடைபெற்ற மோதல் காரனமாக தற்போது இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அவலத்தில் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தேர்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஸ்டாலின்.
அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) April 9, 2021
இருவரையும் இழந்து தவிப்போருக்கு ஆறுதல்!
சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும். pic.twitter.com/h7G2xHLyL5
இது தொடர்பாக தமிழகக் காவல்துறைத் தலைவர் உடனடியாகத் தலையிட்டு, இந்த சம்பவத்திற்கு யார் கராணமாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.