பெண்ணை எரித்துக்கொன்ற தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
அம்மாவாசை என்ற பெண்ணை எரித்துக்கொன்ற தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அம்மாவாசை என்ற பெண்ணை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் தம்பதியான ராஜவேலு மற்றும் மோகனா ஆகியோருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் உள்ளனர். சற்று நேரத்திற்கு முன்பு சிறையில் ஈட்டி ராஜவேலு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அம்மாசை என்ற பெண் ராஜவேலு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அந்தப் பெண்ணை எரித்து கொலை செய்துவிட்டு தன் மனைவி இறந்து விட்டார் என நாடகமாடினார். இவருடைய மனைவி மோகனா ஆந்திரா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ஒரு கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தார்.
தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக அம்மாவாசை என்ற பெண்ணை எரித்துக் கொலை செய்துவிட்டு இறந்தது எனது மனைவி என மாநகராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற்று தன்னுடைய மனைவியை காப்பாற்றினார். அம்மாவாசை காணவில்லை என புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் விசாரணையில் ராஜவேலு மற்றும் ஓட்டுனர் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை கோர்ட் கணவன் ராஜவேலு மனைவி மோகனா மற்றும் டிரைவர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த நிலையில் இன்று மாலை ராஜவேல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சிறைத்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.