இபிஎஸ் இருக்கும் வரை இரட்டை இலைக்கு செல்வாக்கு இல்லை - டிடிவி தினகரன்

ADMK AIADMK Edappadi K. Palaniswami TTV Dhinakaran
By Thahir Feb 09, 2023 08:44 AM GMT
Report

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை தமிழகத்தில் இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலைக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது

தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது.

Double leaf has no influence - DTV Dhinakaran

எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் செல்வாக்கை இழக்கும். எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது.

தற்போது அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது. சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் தேர்தலில் போட்டியிடவில்லை.குக்கர் சின்ன விவகாரத்தில் போதிய நாட்கள் இல்லாததால் நீதிமன்றம் செல்லவில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே இபிஎஸ் தரப்பு பெற முடியும்.அவர்களால் வெற்றி பெற முடியாது.

அதிமுக தற்போது பிராந்திய கட்சியாக மாறி உள்ளது. தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து 12-ந் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் கூறினார்.