ரெய்டு பயமா : ‘’ நாங்க எல்.கேஜி படிக்கு போதே பயப்புடல ..இப்போ டாக்டர்ரேட்டே முடிச்சுட்டோம் ’’ - செல்லூர் ராஜூ பேச்சு

sellurraju doubledoctorate
By Irumporai Oct 22, 2021 06:37 AM GMT
Report

அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நாங்கள் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம். என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ:

 முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை. கருணாநிதி காலத்திலேயே பல சோதனைகளை நாங்கள் சந்தித்து உள்ளோம்.

எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்தோம், இப்போது அச்சுறுத்தலில் டபுள் டாக்டர்ரேட் முடித்து விட்டோம். என்று கூறினார்.

சமீப நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.