உங்களை விட அதிக சம்பாத்யம் - கார்ப்பரேட் ஊழியர்களை வம்பிழுத்த தோசை கடைக்காரர்!

Viral Video
By Sumathi Jan 13, 2024 12:09 PM GMT
Report

தோசைக் கடைக்காரர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தோசை விற்பனையாளர் 

தெருவோர உணவகத்தில் தோசை விற்பனையாளர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், தோசை கடைக்காரர், வீடியோ எடுக்கும் நபரிடம் அமுல் வெண்ணெய் பாக்கெட்டை நீட்டி, இது உண்மையில் அமுல்தானா என்பதைச் சரிபார்க்கும் படி கேட்கிறார்.

உங்களை விட அதிக சம்பாத்யம் - கார்ப்பரேட் ஊழியர்களை வம்பிழுத்த தோசை கடைக்காரர்! | Dosa Seller Mocks Corporate Employees Viral Video

மேலும், நான் அதிகம் படித்தவன் இல்லை, அதனால் வெண்ணெய் பாக்கெட்-ல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைத் தன்னால் படிக்க முடியாது. நான் அதிகம் படிக்காததால் நிறையச் சம்பாதிக்கிறேன்.

இஸ்ரோவின் சம்பளம் இதுதான் - கேட்டதும் வெளியேறிய ஐஐடி மாணவர்கள்!

இஸ்ரோவின் சம்பளம் இதுதான் - கேட்டதும் வெளியேறிய ஐஐடி மாணவர்கள்!

வைரல் வீடியோ

இல்லையெனில் நானும் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் பெற்றுக்கொண்டு ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

மாத சம்பளத்தில் வேலை பார்க்கும் பலரையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காலையில் 9 முதல் மாலை 5 மணி வரையில் வேலைகளில் உள்ள படித்த ஊழியர்கள் இதனைப் பார்த்து புலம்பி வருகின்றனர்.