பொதுமக்கள் தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Covid relaxation Chennai high court
By Petchi Avudaiappan Jun 09, 2021 11:32 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் தெரு விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் தவிப்பதாக விலங்குகள் நல ஆர்வலர் தொடர்ந்திருந்த வழக்கு விசாரணையின்போது, தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

பொதுமக்கள் தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் | Dont Use Wrongly Curfew Relaxations

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை 3 வாரகாலத்திற்கு ஒத்திவைத்தனர். இதன்பின் பேசிய தலைமை நீதிபதி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பலரும் வெளியே சுற்றிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது.

மேலும் இயல்புநிலை திரும்பியதுபோன்று காட்சியளிக்கிறது என அப்போது வேதனை தெரிவித்தனர்.எனவே இதுகுறித்து ஒலிப்பெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறித்தினர். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், கொரோனா முதல் அலையின்போது காவல்துறை கடுமையாக நடந்துகொண்டதால் பொதுமக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே பல பிரச்னைகள் உருவானது.

எனவே இந்தமுறை காவல்துறை கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளதால், பொதுமக்கள் இயல்பாக வெளியே வருவதாகக் கூறினார். ஆனால் இதனை ஏற்கமறுத்த நீதிபதிகள், மக்களின் அசௌகரியங்களைப் போக்கத்தான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதே தவிர, மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க முழு நடவடிக்கையையும் அரசுதான் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.