டேய் என்னை தொடாதே , தொட்டால் தீட்டு : ஆன்மீக சொற்பொழிவாளர் பேச்சால் சர்ச்சை

By Irumporai May 27, 2022 10:18 AM GMT
Report

இந்து மதபோதகர் ஒருவர், தன்னை வணங்க வந்த ஒரு நபரை நீ தீண்டத்தகாதவர் என்னை தொடாதே என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோ பதிவில்  பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்ற ஆன்மிக சொற்பொழிவாளர் ஒரு பகுதியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்துகின்றார்.

அப்போது அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயல்கின்றார் ஒருவர் , அபோது அந்த நபரை கிருஷ்ண சாஸ்திரி  தீண்டத்தகாதவன் என்று அழைக்கிறார்.

ஆனாலும்  அந்த நபர் பாதங்களைத் தொட முயன்றபோது, தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, "என்னைத் தொடாதே" என்று கூறி கால்களை தூக்கிக்கொள்கின்றார்.

இந்த நிகழ்வானது வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக  அதனை பார்த்த இணைய வாசிகள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், பண்டிட் திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி மீது வழக்கு  பதிய வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் ட்விட்டரில் #ArrestDhirendraShastri என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இதற்கு முன்பும் அவர் தனது பேச்சின் மூலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு மேடையில் பேசிய தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி , இந்த பாரத தேசத்தில், ராம நவமியில் யாராவது கல்லெறிகிறார்கள் என்றால், அனைத்து இந்துக்களும் விழித்து ஒன்றுபடுங்கள், உங்கள் கைகளில் ஆயுதம் ஏந்தி, இந்துக்களாகிய நாம் ஒன்று என்று கூறுங்கள் என்று பேசியது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.