அரசியல் மாமாக்களை கண்டுக்கொள்ளாதீர்கள் - உதயநிதி ட்வீட்
அரசியல் மாமாக்கள் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள், அவர்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தயாரிப்பாளர் உதயநிதி
தனக்கு ஏத்த மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் முதலில் ஒரு தயாரிப்பாளராக தான் களமிறங்கினார்.கொரோனா பரவலுக்கு பின்னர் பெரிய படங்களை எடுப்பவர்கள் அதை வெளியிடுவதற்கு ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் துணையை நாடுகின்றனர்.

சமீபத்தில் அப்படி அவர் வெளிட்ட கமலின் விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ட்விட்டர் பதிவு
இந்நிலையில் அரசியல் மாமாக்கள் சொல்வதை பெருசாக எடுத்துக்கொண்டு பதிலளிக்காதீர்கள் என்றும் நாம் நம் வேலையை மட்டும் பார்ப்போம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
Pls don’t reply respond or react to political pimps ! Just ignore them and let’s do our work !
— Udhay (@Udhaystalin) July 14, 2022
இந்த பதிவிற்கு அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் நீங்கள் சொல்வது போன்றே செய்கிறோம் என பதில் அளித்துள்ளனர்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan