டிஐஜி விஜயகுமார் தற்கொலையை அரசியலாக்க வேண்டாம் - ஏடிஜிபி அருண் பேட்டி

Tamil Nadu Police Death
By Thahir Jul 07, 2023 09:18 AM GMT
Report

டிஐஜி விஜயகுமார் தற்கொலையை அரசியலாக்க வேண்டாம் என ஏடிஜிபி அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் உடல் 

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 .50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை 6 மணிக்கு வழக்கம் போல் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தன் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

டிஐஜி விஜயகுமார் தற்கொலையை அரசியலாக்க வேண்டாம் - ஏடிஜிபி அருண் பேட்டி | Dont Politicize Dig Vijayakumar Suicide Adgp Arun

இந்த நிலையில் அவரின் உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு முடிந்து அவரின் சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது.

அரசியலாக்க வேண்டாம் - ஏடிஜிபி அருண் வேண்டுகோள் 

அவரின் உடலுக்கு காவல்துறை உயர்அதிகாரிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், 

dont politicize dig vijayakumar suicide adgp arun

விஜயகுமாருக்கு பணிசுமையோ குடும்பப் பிரச்சினையோ எதுவும் இல்லை. மன அழுத்தத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். விஜயகுமார் மரணத்தை அரசியலாக்க தேவையில்லை.

பணி சூழலில் எந்த பிரச்சனையும் இல்லாத டிஏஜி விஜயகுமார் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என தெரிவித்துள்ளார்.