எச்.ராஜாவுக்கு பக்கவாதம்: கலக்கத்தில் பாஜக

Smt Tamilisai Soundararajan H Raja
By Pavi Feb 01, 2026 05:31 AM GMT
Report

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை

அறிக்கையில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தொடர் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நலம் முன்னேறி வருகிறது. உறவினர்கள், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ராஜாவுக்கு பக்கவாதம்: கலக்கத்தில் பாஜக | Dont Play Politics With Raja Health Soundararajan

தமிழிசை வேண்டுகோள்

தற்போது பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  அரசியல், கொள்கை வேறுபாடுகள் எப்படியானாலும் ஒருவரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

எச்.ராஜாவுக்கு பக்கவாதம்: கலக்கத்தில் பாஜக | Dont Play Politics With Raja Health Soundararajan

விவாத நிகழ்ச்சி முடிந்தபின் எச்.ராஜா சோர்வாக காணப்பட்டதாகவும், உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்கேன் பரிசோதனையில் சில கவலைக்கிடமான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவர்களுடன் ஆலோசித்து குடும்பத்தினரின் விருப்பப்படி அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

எச்.ராஜாவுக்கு பக்கவாதம்: கலக்கத்தில் பாஜக | Dont Play Politics With Raja Health Soundararajan

தற்போது அவர் உடல்நலம் தேறி வருவது ஆறுதலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் உண்மைக்கு புறம்பாக கருத்துகளை பதிவிடுவது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழிசை, மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒருவரின் உடல்நலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.