டீக்கடையில் சிகரெட்லாம் பிடிக்காதீங்க... வாழைப்பழம் சாப்பிடுங்க... புத்திமதி சொன்ன டிஜிபி - வீடியோ வைரல்
சமூகவலைத்தளத்தில் டீக்கடையில் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கிராமத்து தேநீர்க்கடையில், புகை பிடித்துக் கொண்டிருந்தவருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுரை கூறுகிறார்.
அலுவலக பணிக்காக சத்தியமங்கலத்திற்கு சென்ற அவர், இன்று காலையில் உடற்பயிற்சி முடித்து, சின்னட்டிபாளையம் கிராமத்தில் உள்ள தேநீர்க்கடைக்குச் சென்றார்.
அங்கு வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்ட அவர், இது போன்ற இயற்கையான பழங்கள் சென்னையில் கிடைப்பதில்லை. எவ்வளவு நன்றாக சுவையாக இந்த வாழைப்பழம் உள்ளது என்று பேசுகிறார்.
அப்போது டீக்கடை அருகில் நின்று புகை பிடித்துக் கொண்டிருந்த நபர்களிடம், சிகரெட்லாம் பிடிக்காதீங்க... உடம்புக்கு தீங்கு.. வாழைப்பழத்தை சாப்பிடுங்க... இந்த டீயை குடிங்க.. பசும்பால் குடித்து உடல் நலனைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.