விஜய் ரசிகருக்கு பொண்ணு கொடுக்காதீங்க; காதலிக்காதீங்க - கொந்தளித்த வீரலட்சுமி!
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்காதீர்கள் என வீரலட்சுமி கூறியுள்ளார்.
பொண்ணு கொடுக்காதீங்க
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடைபெறுவதற்கு தடையாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார்.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய் மீது யாரும் அவதூற பரப்பவில்லை. நடந்ததைதான் விமர்சிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் தமிழர்களை சுட்டுக் கொன்றதை எதிர்த்து நான் என் கட்சியினருடன் போராட்டம் நடத்தினேன்.
அப்போது அந்த போராட்டத்தில் ஒரு கலவரம் நடந்தது. அப்போது நானே என் கட்சி பொறுப்பாளர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். மேலும் அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டதால் என்னையும் கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து நானாகவே காவல் நிலையத்தில் சரண்டர் ஆகி,
வீரலட்சுமி கொதிப்பு
புழல் சிறையில் 20 நாட்கள் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, 10 ஆண்டுகளாக அந்த வழக்கை நடத்தி வெற்றி பெற்றேன். ஒரு பெண்ணான நானே போராடிய நிலையில் விஜய் ஏன் அங்கிருந்து ஓடி ஒளிந்தாரு, கரூர் சம்பவம் அவரால்தான் நடந்தது. ஒரு கூட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை.
ஒரு கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டால் அதற்கேற்ப போலீஸ் குவிக்க மாட்டார்கள். தொண்டர்களும் நிர்வாகிகளும்தான் பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். விஜய் செய்தது மனிதாபிமானமற்ற செயலாகும். விஜய்க்காக 41 பேர் உயிரிழந்த நிலையிலும் அவரது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி அரை கம்பத்தில் பறக்கவில்லை.
எந்த வாகனம் 41 பேர் காவு வாங்கியதோ அந்த பிரச்சார வாகனத்திற்கு ஆயுத பூஜை கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர். விஜய்க்கு ரசிகனாக இருப்பவரை தமிழகத்தில் எந்த பெண்ணும் காதலிக்காதீங்கள், திருமணம் செய்யாதீர்கள். அது போல் விஜய்யின் ரசிகைக்கு தமிழகத்தில் யாரும் மாப்பிள்ளை கொடுக்காதீர்கள்.
எந்த ஆண்மகனும் காதலிக்காதீர்கள். கரூர் மரணங்களுக்காக விஜய்க்கு தமிழக மக்கள் கொடுக்கும் சரியான தண்டனை இதுதான். பாஜக அனுப்பிய உண்மைக் கண்டறியும் குழுவில் இருந்தது ஹேமமாலினி. அவருக்கு கரூர் குறித்து என்ன தெரியும். அவர் பேசும் பாஷை நமக்கு புரியாது, நாம் பேசும் மொழி அவருக்கு புரியாது. அப்படியிருக்கும் போது அவரை எதற்காக அனுப்பினார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.