தமிழக ஆளுநர் பேசும் கருத்துக்களை பெரிதுப்படுத்த வேண்டாம் - அண்ணாமலை
பாஜக மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் உள்ள நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவருமாகிய தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

மண்ணை சார்ந்து, தர்மாவை சார்ந்து இல்லாவிட்டால் எந்த ஒரு அரசியல்வாதியும் வெற்றி பெற முடியாது.லாலு பிரசாத் யாதவ் இதற்கு உதாரணம். பீகாரில் சிறப்பாக ஆட்சி செய்தவர் லாலு ஆனால் பின்னாளில் அவர் பூஜ்யமாகிவிட்டார்.
தமிழகத்தில் அடிக்கடி புயல் பிரச்சனை வருகிறது. சென்னை மற்றும் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது, எல்லா நேரங்களிலும் அரசை குறை கூற முடியாது. பேரிடர் மேலாண்மைக்கு சிறப்பு கவனம் அரசு செலுத்தி அதற்கு மாநிலம் முழுவதும் குழுவை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள், அரசை இதில் குறை கூற முடியாது தொடர்ந்து இதே போல் களப்பணியாற்ற வேண்டும் என தான் கேட்டுக்கொள்கிறோம்.
ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை பாதிக்கிறது, தற்கொலைக்கு காரணமாக உள்ளது. அதை தடை செய்ய வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம் முறை படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். இதற்கான தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு.
தமிழக அமைச்சர்கள் ஊழல் அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதற்காக பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. இரண்டு மூன்று அமைச்சர்கள் இந்த பட்டியலில் உள்ளார்கள்.
அரியலூர் விவசாயியும், பாஜக தொண்டருமான செம்புலிங்கம் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக, பாஜக சார்பில் தங்களது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், இந்த விவகாரத்தை பாஜக விடப்போவதில்லை.
காவி எந்த கட்சிக்கும் பொது இல்லை... பாஜக அதனை சொந்தம் கொண்டாட விரும்பவில்லை... யாரெல்லாம் இந்த தேசத்தை, மக்களை நேசிப்பவர்கள் அனைவருக்கும் காவி பொது தான்.
பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் ஆளுநரை அரசியலுக்காக மட்டும் பேசுகிறார்கள்.
ஆளுநர் தமிழ், திருக்குறள், திராவிடம் இது குறித்து பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து, அதை பெரிதுப்படுத்த வேண்டாம்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜகவின் குற்றச்சாட்டுகளில் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. காவல்துறை டிஜிபியின் அறிக்கை என்பது அரசியல்வாதி போல உள்ளது. இதற்கு முழு காரணம் முதலமைச்சர்தான்.
திமுகவில் இருந்து பலர் பாஜகவில் இணைகிறார்கள் அவர்கள் மீது நான் நம்பிக்கை வைக்கிறேன். ஸ்லீப்பர் செல்ஸ் என யாரும் இல்லை எனவும் தெரிவித்தார்.