பெத்த வயிறு எரியுது ,என் பொண்ணு அப்படி இல்ல : கதறி அழும் சித்ராவின் பெற்றோர்
பிரபல தொகுப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையானவர் சித்ரா. சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த சித்ரா பின்னர் வெள்ளித்திரை படங்களிலும் நடிக்க ஒப்பந்தமானார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார் சித்ரா. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தங்கியிருந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளார். அதே சமயம், சித்ரா மரணம் குறித்து அவர் கூறி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சித்ரா மற்றும் ஹேமந்தின் நண்பரான இமானுவேல் ஹேமந்த் மற்றும் சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம் மற்றும் போதை பொருட்கள் இருந்ததாக கூறிபரபரப்பை ஏற்படுத்தினார்.
இதேபோல் சீரியல் நடிகையான ரேகா நாயர், சித்ரா நல்லவர் இல்லை, தண்ணி அடிப்பார், கஞ்சா அடிப்பார், பலரை காதலித்தார். பல பேருடன் அவருக்கு தவறான தொடர்பு இருந்தது என்று கூறியிருந்தார். ஹேமந்தும் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாக கூறினார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சித்ராவின் பெற்றோர் தங்களின் மகள் குறித்து வெளியாகும் தவறான தகவல்களால் மேலும் மேலும் உடைந்து போவதாக கூறியுள்ளனர். தங்களின் மகள் அப்படிப்பட்டவர் இல்லை என்றும், தங்களின் மகள் பற்றி தங்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் இல்லை என்ற துணிச்சலில் அவர் குறித்து தவறாக பேசுகிறார்கள் என்றும், சித்ரா இருந்தா இப்படி பேசுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தங்களின் மகள் குறித்து வரும் தவறான செய்திகளை பார்க்கும் போது வயிறு எரியுது என்றும் ஆதங்கப்பட்ட அவர்கள், மறைந்த விஜே சித்ராவை பற்றி தவறாக பேச வேண்டாம் என கூறி கதறி அழுதுள்ளனர்.