Thursday, May 1, 2025

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - வெளியான ஆடியோவால் தொண்டர்கள் ஷாக்!

sasikala audio leaked dont celebrate my birthday
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in வதந்திகள்
Report

தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு ஆதரவாளர்களிடம் வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்.

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - வெளியான ஆடியோவால் தொண்டர்கள் ஷாக்! | Dont Celebrate My Birthday Tommorow Sasikala Tell

அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வெளியே வந்தார். அதன்பிறகு அவ்வப்போது அவரது ஆடியோக்கள் மற்றும் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ரூபம் வேலவன் என்பவருடன், சசிகலா பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - வெளியான ஆடியோவால் தொண்டர்கள் ஷாக்! | Dont Celebrate My Birthday Tommorow Sasikala Tell

அதில், தனக்கு நாளை பிறந்த நாள் என்றும், கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் எனக் கூறியுள்ளார். மேலும், தாங்கள் இருக்கும் பகுதியிலேயே மக்கள் நலத் திட்ட உதவிகளை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.