மழை பாதிப்பு - ஒரு மாத ஊதியத்தை அளிக்கிறேன்..! MP, MLA 'க்களுக்கும் வேண்டுகோள் வைத்த முதல்வர்!!
சென்னை மழை பாதிப்பில் மீட்புப்பணிக்காக தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை அளிப்பதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மழை பாதிப்பு
கடந்த ஞாயிறு, திங்கள் இடைவிடாது பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.
தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. தொடர்நது பல்வேறு இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் சில இடங்களில் இன்னும் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றார்.
இந்நிலையில், தான் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். அதே போல, தமிழகத்தை சேர்ந்த MP மற்றும் MLA'க்களும் தங்களது ஊதியத்தை அளிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக முதலவரின் ஒரு மாத ஊதியம் என்பது 2,05,000 ரூபாயாகும். அதே போல தமிழக எம்.எல்.ஏ'க்களின் ஒரு மாத ஊதியம் 1,05,000 ரூபாயாகும்.