ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய நபர் - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

Tamil nadu Madurai Anbil Mahesh Poyyamozhi
By Jiyath Jan 13, 2024 11:49 AM GMT
Report

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாள்" அவர்களை வணங்குகிறேன்!போற்றுகிறேன்! என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும்,

ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய நபர் - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி! | Donated Rs 7 5 Crore Property To Govt School

அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி அவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

மகத்தானது

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது!.

ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய நபர் - அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி! | Donated Rs 7 5 Crore Property To Govt School

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் அவர்கள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்.